தற்போதைய கூட்டமைப்பு மக்களுக்கு பொருத்தமற்றது : சங்கரி!!

தங்களைப் பாதுகாப்பதற்காகவும், தேவையின் நிமித்தம் சேர்ந்தவர்களும் தான், புதிய கூட்டணியில் இணைந்திருக்கின்றார்கள் என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இன்று, கிளிநொச்சியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் விடுதலைக்கூட்டணியானது தமிழர்களது உரிமைகளிற்காக போராடுகின்ற ஒரு கட்சியாகவும், ஐம்பது ஆண்டுகளிற்கு மேற்பட்ட ஒரு கட்சியாகவும் உள்ளது.

தற்போதைய கூட்டமைப்புக்கள் தங்களை பாதுகாப்பதற்காகவே கூட்டு சேர்ந்துள்ளன.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியிலே விக்னேஸ்வரன் இணைக்கின்றார்.

இவர் நீண்ட காலம் நீதிதிதுறையிலே செயற்பட்ட ஒரு நேர்மையானவர்.

ஆனால் அவர் இணைந்திருக்கின்ற கூட்டுக்கள் பொருத்தமற்றது.

அவர் ஒருமுறை குறித்த கூட்டு தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

நானாக இருந்தால் ஒருமுறை குறித்த கூட்டு தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பேன்.

இந்த நிலையில் சி.வி விக்னேஸ்வரன் புதிதாக அமைத்துள்ள குறித்த கூட்டணியையு்ம, ஏனைய கட்சிகளும் ஒற்றுமையாக செயற்படுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும்.

2004ம் ஆண்டு காலத்தில் இவ்வாறான ஒரு சூழலே காணப்பட்டது.

அன்றும் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒரு கூட்டாக செயற்பட வேண்டிய நிலை காணப்பட்டது.

இன்றும் அவ்வாறான சூழல் காணப்படுகின்றது.

இந்த நிலையில் அனைத்து தரப்பினரும் தந்தை செல்வா, ஜீஜீ பொன்னம்பலம் ஆகியோர் இணைந்து ஆரம்பித்த தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சியில் இணைய வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இதனை உணர்ந்து அனைவரும் ஒன்றாக செயற்பட முன்வர வேண்டும்.

அவ்வாறு இணைந்து செயற்படுவதற்காக அனைவரும் முன்வாருங்கள்.

அவ்வாறு இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டு அதில் தெரிவாகும் பொருத்தமான ஒருவரிடம் மறுநாளே கட்சியின் தலைமை உள்ளிட்ட பொறுப்புக்களை கையளிக்க தயாராக உள்ளேன்.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய ஒரு கூட்டமைப்பாகும்.

அதன் மூலமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

ஆனால், தற்போது இருக்கின்ற கூட்டமைப்புக்கள் குறித்த விடயத்திற்கு பொருத்தமற்ற கூட்டமைப்புக்களாக உள்ளது.

மாவை சேனாதிராஜா தலைமைப்பதவியிலிருந்து விலகிப்போனால் தமிழ் மக்களிற்கு விடிவு கிடைக்கும். என தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!