அரசியல் இருப்புக்காகவே கல்விக்கொள்கையில் மாற்றம் – சிறிதரன்!!

இலங்கையின் கல்விக்கொள்கைகள் அரசியல் இருப்புக்காகவே ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களால் அமைக்கப்படுகின்றன எனவும், துரித கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபா நிதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் சக்திபுரத்தில் அமைக்கப்பட்ட ஜமுனன் முன்பள்ளிக்கான புதிய கட்டடத்திறப்பு விழாவில் இவ்வாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் சக்திபுரத்தில் அமைக்கப்பட்ட ஜமுனன் முன்பள்ளிக்கான புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று முன்பள்ளி வளாகத்தில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் எஸ்.சிறிதேவன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்துகொண்டு முன்பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார்.

குறித்த கட்டடமானது துரித கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இரண்டு மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வலய கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கிராமத்தில் சாதனையாளர்களாக தெரிவானவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அண்மையில் கழிவுப்பொருட்களைக்கொண்டு மோட்டார் சைக்கிளை வடிவமைத்த கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவனும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!