2020 ஒலிம்பிக் திட்டமிட்டவாறு நடைபெறும்!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

சீனாவின் வுஹான் பகுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் 25 இற்கும் மேற்பட்ட நாடுகளில் மிக வேகமாகப் பரவி வருகின்றது.

இதன் காரணமாக எதிர்வரும் ஜீலை மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் பாதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் ஏற்பாட்டாளர்களால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அத்துடன் விசேட முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள ஜப்பானில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நால்வர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.(s)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!