முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜிற்கு இந்திய அரசு கௌரவம்!!!

இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை பணிமையம் இனிவரும் காலங்களில் ‘சுஸ்மா ஸ்வராஜ் பணி மையம்’ என அழைக்கப்படவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் சேவையை கௌரவிக்கும் விதமாக அவரது பிறந்த நாளான இன்று முதல் பிரவாசி பாரதிய கேந்திரத்தின் பெயர் ‘சுஸ்மா பவன்’ என அழைக்கப்படும்.

இதேபோல் வெளியுறவுத்துறை பணிமையம் இனிவரும் காலங்களில் ‘சுஸ்மா ஸ்வராஜ் பணிமையம்’ என அழைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்திருந்த காலத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சுஸ்மா ஸ்வராஜ் விரைந்து செய்திருந்தார்.

மேலும் இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் சுஸ்மா ஸ்வராஜ் கடமையாற்றியிருந்தார்.

அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த வேளை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் தனது 67 ஆவது வயதில் அவர் காலமானார்.

வலதுசாரி கடும்போக்குக் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தபோதும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களாலும் மிகவும் மதிக்கப்பட்ட நபராக சுஸ்மா ஸ்வராஜ் விளங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(s)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!