கல்முனையில், முஸ்லிம்களின் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது

அம்பாறை கல்முனை வடக்கு உப தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டாம் எனத் தெரிவித்து, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது.

கல்முனை வடக்க உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி, கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில், கடந்த 17 ஆம் திகதி கல்முனை விகாராதிபதி சங்கரட்ணதேரர் தலைமையிலான ஐவர் கொண்ட குழுவினர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரு தினங்களில் குறித்த பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டாம் எனக்கோரி, கல்முனை பழைய தனியார் பஸ் தரிப்பு நிலையத்தின் முன்பு, முஸ்லிம் மக்களும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று தமிழ் தரப்பினர் தங்களது உண்ணாவிரதத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர் எனத் தெரிந்து கொண்ட முஸ்லிம் தரப்பினரும், தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

கல்முனை பிரதேசத்தில் கடந்த ஒருவார காலமாக ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்கள் தற்போது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

கல்முனை நகர் வழமை போன்று சுமூகமாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!