30 ஓவர்கள் வீசியும் ஒரு விக்கெட்டைக்கூட கைப்பற்ற முடியாத நிலை

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடியது. குறித்த தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடிய நிலையில், ஒரு போட்டி முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் குறித்த தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

இந்நிலையில், குறித்த இரு தொடர்கள் நிறைவிலும் ஒருநாள் வீரர்களுக்கான அனைத்து தரவரிசைகளிலும் முதல் 10 இடங்களுக்குள் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்திலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

கடந்த பல மாதங்களாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜெஸ்பிரிட் பும்ரா குறித்த தரவரிசையில் முதலிடத்தில் காணப்பட்டார்.

தென்னாபிரிக்க தொடரை தவறவிடும் க்ளென் மெக்ஸ்வெல்!
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில்…

இந்நிலையில், நியூசிலாந்து அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான ஜெஸ்பிரிட் பும்ரா 3 போட்டிகளிலும் விளையாடி மொத்தமாக 30 ஓவர்கள் வீசியும் அவரால் ஒரு விக்கெட்டைக்கூட கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அதன் அடிப்படையில் இதுவரை காலமும் முதலிடத்தில் காணப்பட்ட ஜெஸ்பிரிட் பும்ரா 719 தரவரிசை புள்ளிகளுடன் இரண்டாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக இரண்டாமிடத்தில் காணப்பட்ட நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் 727 தரவரிசை புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். நிறைவுபெற்ற குறித்த ஒருநாள் சர்வதேச தொடரில் ட்ரெண்ட் போல்ட் விளையாடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் குறித்த தொடரில் விளையாடாத நியூசிலாந்து அணி வீரர்களான மெட் ஹென்றி மற்றும் லுக்கி பேர்கசன் ஆகியோர் ஒன்பதாம், பத்தாம் இடங்களுக்கு பின்தள்ளப்பட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 645 தரவரிசை புள்ளிகளுடன் எட்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!