தமிழீழ விடுதலைக் கழகம் அதாவது புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 9 ஆவது பேராளர் மாநாடு, வவுனியாவில் இன்று நடைபெற்றது.
தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தாத்தன் தலைமையில், வவுனியா கோவில்குளம் சந்திப்பகுதி மண்டபத்தில், பேராளர் மாநாடு இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன் மங்கள விளக்கேற்ற, மரிணித்த தோழர்களுக்கான மௌன அஞ்சலியுடன், போராளர் மாநாடானது ஆரம்பமானது.
மாநாட்டில் வடக்கு கிழக்கு பகுதியை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன், புலம்பெயர்ந்த நிலையில் செயற்பட்டு வந்த தமிழீழ விடுதலை கழகத்தின் உறுப்பினர்களும், பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, புளொட் அமைப்பின் 9 ஆவது பொதுச் சபைக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டுள்ளது.(சி)