212 ஓட்டங்களுடன் பாகிஸ்தான் முன்னிலையில்.

பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பங்களாதேஷ் 233 ஓட்டங்களில் சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் 445 ஓட்டங்கள் குவித்து சகல விக்கட்டுக்களையும் இழந்தது . இன்றைய 3 வது நாளில் 212 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பங்களாதேஷ் 2 வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடியது.

41 வது ஓவரை நசீம் ஷா வீசினார். இந்த ஓவரின் 4 வது பந்தில் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 38 ஓட்டங்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்த பந்தில் தைஜுல் இஸ்லாமையும் எல்பிடபிள்யூ மூலம் வெளியேற்றினார். கடைசி பந்தில் மெஹ்முதுல்லாவை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம் 16 வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஹாட்ரிக் உடன் 2 வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பங்களாதேஷ் இன்றைய 3 வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் எடுத்துள்ளது

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!