கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு : 6 பேர் கைது

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, இயக்கச்சி, முகமாலை, தர்மக்கேணி, எழதுமட்டுவாழ், பகுதிகளில், சட்டத்திற்கு முரணாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

6 கனரக டிப்பர் வாகனங்கள், பளைப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், 6 டிப்பர் வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில், பளைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!