அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே தேசிய மட்ட உதைபந்தாட்டம்!

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட 20 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்டப் போட்டியின் காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

நேற்று மாலை சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற காலிறுதி ஆட்டத்தில் கிண்ணியா அல் அக்ஷா கல்லூரியை 3 – 0 என்ற கோல் கணக்கில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் அ.சறோன் இரு கோல்களையும், நா.பவிராஜ் ஒரு கோலினையும் பெற்றுக் கொடுத்தனர்.

கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற குழுநிலை உதைபந்தாட்டப் போட்டிகளில், குறித்த அணியினர் எந்தவொரு போட்டியிலும் தோற்காது 10
புள்ளிகளுடன் குழுவில் முதல் நிலை பெற்று வந்த நிலையில், நேற்றைய காலிறுதிப் போட்டியிலும் வெற்றியீட்டி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பில் நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் சென் பற்றிக்ஸ் கல்லூரியை எதிர்த்து கொழும்பு சாஹிரா கல்லூரி விளையாடவுள்ளது.

இச்சுற்றுப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற வடமாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலை சென் பற்றிக்ஸ் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!