கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் தன்னிலை விளக்கம் கோரப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் கடந்த 20.06.2019 அன்று கடமைக்கு அறிக்கையிடாத சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் அதற்கான காரணத்தை கோரி அவர்களிடம் தன்னிலை விளக்கமளிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ஆரணி தவபாலன் கடிதம் அனுப்பியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்களுடாக அவசரம் எனக் குறிப்பிட்டு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் விளக்கம் கோரல் எனத் தலைப்பிட்டு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கடந்த 20.06.2019 அன்று கடமைக்கு அறிக்கையிடாத சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தன்னிலை விளக்கத்தினை வலய தலைமையக முகாமையாளருக்கு ஊடாக பெற்று தங்களுக்கு ஊடாக அனுப்பி வைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோத்தர்கள் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்துடன் இணைந்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அகியோர் சமுர்த்தி உத்தியோகத்தர்களை தரக் குறைவாக பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!