வடக்கு ஆளுநரால் மாங்குளத்தில் மரநடுகை

உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாகவும், இத்தினைத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு வடமாகாணத்தின் பங்களிப்பினை வழங்கும் நோக்கிலும் கொழும்பு – கண்டி பிரதான வீதியான A9 வீதியின் வவுனியா தொடக்கம் இயக்கச்சி வரையான வீதியின் இருமருங்கிலும் மரக்கன்றுகளை நாட்டும் ஆரம்ப செயற்திட்டம் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் A9 வீதியின் மாங்குளம் 226ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று (05) முற்பகல் இடம்பெற்றது.

A9 வீதியின் குறிப்பிட்ட பகுதியினை பசுமை வீதியாக மாற்றும் ஆளுநரின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த மரநடுகைத் திட்டம் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன்  மேற்பார்வையில், வடமாகாண விவசாய அமைச்சின் உதவியுடன் பிரதேச சபைகளின் பராமரிப்பில் இடம்பெறுவதுடன், இந்த திட்டத்தின் மாவட்ட ரீதியான நிகழ்வுகள் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர்களின் தலைமையில் வவுனியா மற்றும் ஆனையிறவு பிரதேசங்களில் இடம்பெற்றது.(மா)

Recommended For You

About the Author: KUKAN

error: Content is protected !!