உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சிரமதானப் பணி (படங்கள் இணைப்பு)

 

கிழக்கிலங்கை வரலாற்று சிறப்புமிகு உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு முதல் தடவையாக பொத்துவில் பிரதேச செயலக தமிழ் உத்தியோகத்தர்கள் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டதுடன் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் தங்களது வழமையான சிரமதானப் பணிகளை ஆலயத்தில் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்கள் முன்னெடுத்து இருந்தன.

பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் அவர்கள் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வரலாற்றில் முதல் தடவையாக உகந்தை ஸ்ரீமுருகன் ஆலயத்தில் பொத்துவில் பிரதேச செயலக தமிழ் உத்தியோகத்தர்கள் சிரமதானப் பணிகளை முன்னெடுத்து இருந்ததுடன் ஒருசில முஸ்லிம் உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டு இருந்தனர்.

இதேவேளை திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் அவர்களின் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் ஆலயத்தில் இரண்டு நாட்கள் பாரிய சிரமதானப் பணிகளை முன்னெடுத்து இருந்தனர்.

இதேவேளை உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு வருகைதரவுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் நலன் கருதி ஆலய வண்ணக்கர் திஸாநாயக்க சுதுநிலமை அவர்களின் வழிகாட்டலில் ஊடாக குடிநீர், மின்சார இணைப்புகள் மற்றும் பாணமை பொலிஸார், கடற்படை மற்றும் வன பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் இணைந்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆலய சுற்றுச் சூழல் பகுதியில் மரைகள்,யானைகள் உணவு நீர் என்பன தேடி மக்களோடு மக்களாக நடமாடுவதனால் பார்ப்பதற்கு ஆலயத்திற்கு அழகு சேர்ப்பதுடன் இங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்த போதிலும் யானைகள் தங்களை தாக்கிவிடுமோ என்ற அச்சம் நிலவுவதாகவும் மக்கள் கருத்துக்கள் தெரிவித்து இருந்தனர். (நி)

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!