தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விமர்சித்து இன்று பலர் தமது அரசியல் இருக்கையை தக்கவைத்துக்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவினால் கம்பரெலிய திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதி நேற்றைய தினம் 42 பொது அமைப்புகளுக்கு பத்திரங்கள் மூலம் கையளிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.
அரசாங்கத்துடன் இணைந்து பயணித்தாலே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகான முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். (நி)