உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ISIS தலைவன் அபு பக்கர் அல் பக்டாடிக்கு அறிவிக்கப்படவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளது.
தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ”தி ஹிந்து” இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
உயிர்த ஞாயிறு நடத்தப்பட்ட தாக்குதலை ISIS பொறுப்பேற்றிருந்தாலும் அவர்களுக்கு தாக்குதலின் பின்னர்தான் தகவல் கிடைத்ததாகவும் தி ஹிந்து மேலும் தெரிவித்துள்ளது
மேலும் தாக்குதல் நடத்தியவர் ISIS அமைப்புக்கு ஆதரவாக இருந்தாலும் அவர் எந்த வகையில் அந்த அமைப்பின் தலைவருடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற விடையம் சிக்கலாக உள்ளதாக அந்த உயர் அதிகாரி தெவித்துளார்
அண்மையில் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட மொஹமட் மில்ஹான் என்பவரின் கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணணிய ஆகியவற்றை விசாரணைக்காக கோரியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தகாக ‘தி ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது..(சே)