நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத பணியாளர்களின் வேலைநிறுத்தம் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட உள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இந்திக்க தொடங்கொட இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
நாளை முதல் தங்களது கடமைக்கு சமுகமளிக்குமாறு அனைத்து பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், அரசாங்கம் தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாவிட்டால், எதிர்காலத்தில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் என்றும் இந்திக்க தொடங்கொட எச்சரிக்கை விடுத்துள்ளார்.(சே)