நீர் இன்றி பயிர் வாடுவதாக கிளிநொச்சி விவசாயிகள் கவலை.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கை, உரிய நீர் விநியோகம் இன்றி பெருமளவான நெற்பயிர்கள் அழிவடையும் அபாய நிலையில் காணப்படுவதாக விவசாயியகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக் குளத்தின்கீழ் இவ்வாண்டு 16 ஆயிரத்து 100 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகச்செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்கான பயிரச்செய்கைக் கூட்டம் கடந்த மார்ச் மாதம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து சிறு போக செய்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிறுபோக கூட்டத்;தீர்மானத்திற்கு மாறாக அத்துமீறிய விதைப்புக்களும், மேலதிக விதைப்புக்களும் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதனால், உரிய முறையில் பயிர்ச்செய்கை மேற்கொண்ட அதிகளவான விவசாயிகள் பாதிக்கப்படும் அபாய நிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!