ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தினை அரச உடமையாக்குமாறு விசாரணைக்குழு பரிந்துரை

கிழக்கு மாகாணத்தில் புனான பகுதியில் அமைக்கப்பட்ட ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தினை அவசரகாலச் சட்டவிதிகளின் கீழ் அரச உடமையாக்குமாறு பேராசிரியர் ஆஸ்மாரசிங்க தலமையில் அமைக்கப்பட்ட விசேட பாராளுமன்ற விசாரணைக்குழு பரிந்துரை வழங்கியுள்ளது.

விசாரணை அறிக்கையினை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்து உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தினை அமைப்பதற்காக அரச காணியை பெற்றுக் கொண்டபோதும் கட்டடம் அமைப்பதற்கான எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்று தெரிவித்தார். கட்டிடம் அமைப்பதற்கான எந்தவித ஆவணங்களும் பிரேச செயலகத்திடம் காணப்படவில்லை. பலவந்தமாக அதிகாரத்தினை பயன்படுத்தி இதனை அமைத்திருக்கின்றார்கள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டபோதும் அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை பிரதி அமைச்சராக ஹிஸ்புல்லா பதவி வகித்தபோது இந்த பல்கலைக்கழகத்திற்கான உடன்படிக்கையில் அப்போதய அமைச்சர் டளஸ்அழகப் பெருமாளுடன் கைச்சாத்திட்டார். அது தவறானது என எமது விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது. பிரதி அமைச்சராக இருந்து கொண்டு அரசாங்கத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமை தவறான விடயம் என்பதை எமது விசாரணைக்குழு பரிந்துரைக்கின்றது.

இதற்கான பணம் கிடைக்கப்பெற்றமை தொடர்பில் நாம் ஆராய்ந்தபோது ஹிஸ்புல்லாவின் புதல்வர் முன்னுக்கு பின் முரண்பட்ட விடயங்களை குறிப்பிட்டார். முதலில் கடன் அல்ல என குறிப்பிட்டவர் பின்னர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் கடன் பெறப்பட்டமைக்கான எந்தவித ஆவணங்களையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. இறுதியான விசாரணையில் ஐந்து ஆவணங்களை கடன்பெற்றதாக வழங்கியிருக்கின்றார். ஆனால் அவை இலங்கை மத்திய வங்கியின் சட்ட விதிகளுக்குள் அமையவில்லை.

கடன் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தாலும் அது பிழையான வழியில் சட்டத்திற்கு விரோதமாக கிடைக்கப் பெற்றுள்ளது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எனவே இது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு எமது விசாரணைக்குழு பரிந்துரைக்கின்றது. நீதிக்கு புறம்பாக அமைக்கப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தினை அரச உடமையாக்கி கிழக்கு பல்கலைக்கழகமாகவோ அல்லது கலாச்சார மண்டபமாகவோ அல்லது அருங்காட்சியகமாகவோ மாற்ற முடியும் என விசேட பாராளுமன்ற விசாரணைக்குழு ஆலோசனை வழங்கி பருந்துரைக்கின்றது. அத்தோடு முழுக்க முழுக்க இலங்கை சட்ட விதிகளை மீறி செயற்பட்ட அனைவருக்கு எதிராகவும் நீதித்துறை ஊடாக நடவடிக்கை எடுக்குமாறும் விசாரணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!