சஹ்ரான் தொடர்பில் TIDக்கு தகவல் வழங்கியிருந்தோம்-அப்துல் ராசிக்

2016 ஆம் ஆண்டு சஹ்ரான் எனும் தீவிரவாதி ஜிஹாத் தொடர்பில் முகப்புத்தகத்தில் சில காணொளிகளை பதிவிட்டிருந்ததாகவும் அவை இஸ்லாத்திற்கு முரணானது என்பதனால் அது தொடர்பான சகல தகவல்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு வழங்கியதாக அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நேற்று முன்னிலையாகி சாட்சி வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் .

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

தீவிரவாதியான சஹ்ரான் தொடர்பில் சகல தகவல்களை 2016 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு வழங்கியிருந்தோம் சமூகசேவை அமைப்பு என்ற வகையில் தன்னுடைய கடமையை நிறைவேற்றியதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கருதி இவ்வாறு செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் தாங்கள் 2015 ஆம் ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்ட குர்ஆனின் 472 குறிப்பில் பெண்கள் முகத்தை மூடுவது தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அது முஹம்மத் நபியின் மனைவிமார்களுக்கு மட்டுமே உரியது எனவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அகில இலங்கை ஜமியதுல் உலமா சபை அண்மையில் மொழிபெயர்த்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட குர்ஆனில் முகத்தை மூடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!