ரஞ்சன் ராமநாயக்க கூறுவது அனைத்தும் பொய் – சிங்களக் கூட்டமைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறுவது அனைத்தும் பொய்யான விடயம் என்பது, அவரும், நீதிபதி பத்மினி ரணவக்கவும் பேசும் தொலைபேசி உரையாடல் ஊடாக தெளிவாகத் தெரிகின்றது என, சிங்களக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிபதி பத்மினி ரணவக்கவுடன் பேசும் உரையாடல் அடங்கிய ஒலிப்பதிவினை ஊடகங்களுக்கு வெளியிட்டு கருத்துத் தெரிவிக்கும்போது சிங்களக் கூட்டமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்த நாட்டின் நீதித்துறை மீது கை வைத்த ரஞ்சன் ராமநாயக்க அதற்காக சிறை சென்றதன் பின்னர் நாடாளுமன்ற வரப்பிரசாதத்தினை பயன்படுத்தி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து உரையாற்றுகின்றார்.

அவர் தன் மீது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது அது தொடர்பில் பேசுகின்றார்.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு இருக்கும்போது எவ்வாறு அவர் அது தொடர்பில் நாடாளுமன்றத்தினுள் பேச முடியும் என நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை வைத்துக் கொண்டு இந்த நாட்டை சீரழித்த ரஞ்சன் ராமநாயக்கவுடன் அவரின் குழாம் இணைந்து கொண்டு மீண்டும் நாடாளுமன்றத்தில் நீதியினை சீர்குலைக்கப் பார்க்கின்றனர்.

நீதிபதி பத்மினி ரணவக்க தாம் தொலைபேசியில் ரஞ்சன் ராமநாயக்கவுடன் பேசியதன் தவறினை உணர்ந்து கொண்டுவிட்டார்.

துமிந்த திஸ்ஸநாயக்கவை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்காக அவரின் பிள்ளைகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது என கூறுகின்றார்.

மேலும் இதுபோன்ற பல இருப்பதாக புதிய கதையினைக் கூறி இல்லாத பிரச்சினைகளை மீண்டும் தோற்றுவிக்க ரஞ்சன் ராமநாயக்க முற்படுகின்றார்.

ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி ஊடாக நீதிபதி பத்மினி ரணவக்கவுடன் பேசும் ஒலிப்பதிவு ஊடாக, அவரின் பேச்சு அனைத்தும் பொய் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.(s)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!