மட்டு, இந்து கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி!!

மட்டக்களப்பு இந்து கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வு இன்று கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு இந்து கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் பாடசாலை அதிபர் இரா.சண்டேஸ்வரன் தலைமையில் இந்து கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்,

அதனை தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மாணவர்களின் இல்ல அணிவகுப்பு நடைபெற்றது.

தொடர்ந்து இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வுகளுடன் விளையாட்டு ஆரம்பமானது,
இவ் விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் ஓட்டப்போட்டி, உடற்பயிற்சி நிகழ்வுகளும் இடம்பெற்றது.

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிகளினால் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்வி உதவி கல்விப்பணிப்பாளர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!