கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் ஆராய்வதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று கல்முனை மாநகர சபை முதல்வரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பான இறுதி முடிவினை ஆராய்ந்து இவ்விரு சமூக பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் என சந்திப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
எனினும் குறித்த சந்திப்பு தொடர்பான முடிவுகள் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை.
இதேவேளை, கல்முனை மாநகர சபை முதல்வர் அலுவலகத்திற்குள் இடம்பெறும் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.