காரைநகரில் மீன்பிடிக்க சென்ற இருவரை காணவில்லை

MISSING red Rubber Stamp over a white background.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற  இரு இளைஞர்களைக் காணவில்லை  என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரைநகர் பகுதியைச் சேர்ந்த கோடிஸ்வரன் குப்பிரியன் (வயது 23) மற்றும் தவராசா சத்தியராஜ் (வயது 26) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர்.

காரைநகர் வடக்கு கடற்பரப்பில் நேற்று முன்தினம் (02)மதியம் 3.30 மணியளவில் மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர்.

அன்று சென்ற இருவரும் இன்று    வரை வீடு திரும்பாத நிலையில்,  கடலிற்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களும் அவர்களை தேடியுள்ளனர்.

கடலில் காணாத நிலையில், இன்று   ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அதேவேளை, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை மற்றும் மீன்பிடி அமைச்சிலும் மீனவர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.(மா)

Recommended For You

About the Author: KUKAN

error: Content is protected !!