பணிப்புறக்கணிப்புக்கு எதிராக இ.போ.ச தயார் நிலையில்

 

இன்று 2 மணிக்கு புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டால், மேலதிக பேருந்து சேவைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்காக 800 மேலதிக பேருந்து சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட புகையிரத பணியாளர்களது தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தொடருந்து தொழிற்சங்களின் பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.

 

 

 

இந்த சந்திப்பில் தீர்வு வழங்கப்படாவிட்டல், பிற்பகல் 2 மணிக்கு பின்னர் திட்டமிட்டபடி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருப்பதாக தொடருந்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!