வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இன்று புளியங்குளத்தில் போதை ஒழிப்பு நடைபவனி நடைபெற்றது.
வவுனியா வடக்கு பிரதேசம் போரினால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட பிரதேசம்.
இப்பிரதேசம் மீள்குடியேற்றத்தின் பின் மீள்எழுற்சி பெற்று வரும் நிலையில், போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து வருகின்றது.
இதன் காரணத்தினால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் நிலை காணப்படுகின்றது.
அவற்றை கட்டுப்படுத்தும் வகையில், வடக்கு மாகாண ஆளுநர் செயலகமும் வவுனியா வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நடைபவனியில், போதை ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு புளியங்குளம் மகாவித்தியாலய மாணவர்களும், வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் புளியங்குளம் வலையக்கல்வி பணிமனையிலிருந்து புளியங்குளம் மகாவித்தியாலயம் வரை விழிப்புணர்வு நடைபவணியில் ஈடுபட்டனர். (நி)