அண்மையில் அமைச்சு பதவி கைவிட்டதை போல் மீண்டும் எந்தவொரு சந்தர்பத்திலும் பதவியை கைவிட தயாராக இருப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.
மாவனெல்ல கல்கந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துளார்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படும் சவால்களை தடுப்பதற்காக சில முஸ்லிம் அமைச்சர்கள் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சூழல் ,முஸ்லிமாக்கள் மற்றும் கட்சி போன்றவற்றை சிந்தித்து தாம் எடுத்த அந்த முடிவை சிலர் வேறு விடையங்களைக் கொண்டு சித்தரிப்பதாகவும் அவர் தெரித்துளார்.(சே)