யாழில் நள்ளிரவில் வீதியில் நின்ற நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் நேற்று நள்ளிரவு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு வேளை வீதியில் நின்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நேற்று நள்ளிரவுவேளை வீதி ரோந்து நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டபோது, வீதியில் சந்தேகத்திற்கு இடமாக நால்வரும் நின்றுள்ளனர்.

சம்பவத்தின்போது விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவர்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காத காரணத்தினால், கண்டியைச் சேர்ந்த 2 பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்களையும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞர் ஒருவரையும், தமிழ் இளைஞர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் 27 வயது முதல் 30 வயதுடையவர்கள் என்றும், கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன்,  விசாரணையின் பின்னர், நால்வரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: KUKAN

error: Content is protected !!