அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரி கல்முனையில் இடம்பெற்று வரும் உண்ணாவிரத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில், இன்று திருக்கோவில் பிரதேசம் மற்றும் பொத்துவில் தமிழ் வர்த்தக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டு வியாபாரிகள் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துமாறு மிக நீண்ட காலமாக கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மதகுருமார் உட்பட பலர் உண்ணாவிரத்தினை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இன்று அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதேசங்களில் கடைகளை அடைத்து ஆதரவினை வழங்கி வருகின்றனர்.
ஹர்த்தால் காரணமாக அம்பாறை தமிழர் பிரதேசங்களின் இயல்பு நிலைமைகள் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது. ஆனால் அரச நிறுவனங்கள், பாடசாலைகள், அரச பேரூந்துகள் என்பன வழமைபோல இயங்கி வந்தது. இருந்தபோதும் வீதிகளில் மக்கள் நடமாற்றமின்றி காணக்கூடியதாக இருந்தன.
ஹர்த்தால் தொடர்பாக பொத்துவில் கோமாரி பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு ஆதரவு வழங்கி வருவதுடன் டான் தொலைக்காட்சிக்கும் கருத்துக்களையும் தெரிவித்து இருந்தனர்
.