அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரிஇ 4 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அத்துரலிய ரத்தின தேரர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரிஇ கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டம் ஒன்று 4 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முற்போக்கு தமிழர் அமைப்பும் மட்டக்களப்பில் போரட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் இன்று முற்போக்கு தமிழர் அமைப்பின் போராட்டத்தில் அத்துரலிய ரத்தின தேரர் சற்று முன்னர் கலந்துகொண்டு தனது ஆதரவை வெளியிட்டார்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர். (நி)