கல்முனையில் உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது!

சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

கல்முனையில் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மதத்தலைவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் உண்ணாவிரத போராட்ட இடத்துக்குச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவை வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரிய உண்ணாவிரத போராட்டத்தில் 1000 தீபங்கள் ஏற்றப்பட்டு இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுகோரி கடந்த திங்கட்கிழமை 9 மணியளவில் மதகுருமார்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!