பதட்டம் ஆரம்பம்-அமெரிக்காவின் உளவு விமானத்தை வீழ்த்தியது ஈரான்

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.
ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பதிலடி கொடுத்து வருகிறது.  சமீபத்தில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரானும், அமெரிக்காவும் ஒருவர்மீது ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில்,  ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்தியத்திற்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், உடனடியாக பதில் எதுவும் கூற முடியாது என்று அமெரிக்க ராணுவம் கருத்து கூற மறுத்து விட்டது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!