சிலோன் தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் பிற்பகல் 2 மணிக்கு இந்த தெரிவுக் குழு கூடுகிறது.
அவருக்கு மேலதிமாக காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளும் சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்றையதினம் இந்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் ஒன்று கூடி, இதுவரையில் பதிவான சாட்சியங்களை பகுப்பாய்வு செய்துள்ளனர் .