வவுனியாவில் ஆளுநரின் மக்கள் சந்திப்பு

வடக்கு மாகாண மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் சந்திப்பு இன்று வவுனியாவில் இடம்பெற்றது.

வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் தலைமையில் நடைபெற்ற இம்மக்கள் சந்திப்பில், வடக்கு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டனர்.

இதன்போது, வவுனியா மாவட்ட அங்காடி வியாபாரிகள் தங்களுக்கு ஓர் நிரந்தர இடம்பெற்றுதரகோரி ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அத்துடன் தமக்கான இடங்களையும் தெரிவு செய்துள்ளதாகவும் அவர்கள் ஆளுநரிடம் தெரிவித்திருந்தனர்.

மேலும் வவுனியா நகரசபையால் அங்காடி வியாபாரம் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கான இடங்களைத் தெரிவு செய்துள்ளதாகவும் வியாபாரிகள் வடக்கு ஆளுநரிடம் தெரிவித்திருந்த நிலையில், இதற்கான முடிவை ஆளுநர் சாதகமாக பரிசீலிப்பதாகத்;தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடமாகாண சுகாதாரத் தொண்டர்கள் தங்கள் பிரச்சனை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், வடமாகாணத்தில் 45 வயது தாண்டிய சுகாதாரத் தொண்டர்கள் உள்வாங்குவது தொடர்பாக ஆளநரிடம் கோரிக்கையை முன்வைத்திருந்தோம் எனவும், அது தொடர்பாக சாதகமாக பரிசீலிப்பதாக ஆளுநர் கூறியிருப்பதாகவும் தெரிவித்தனர். (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!