கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி இன்று மூன்றாவது நாளாகவும் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவத்து அமப்பாறை மாவட்டத்தின் தமிழர்கள் வாழும் பிரதேசம் எங்கும் அடையாள உண்ணாவிரதப்போராட்டங்களும் சூழற்சி முறைப்போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.
இதற்கமைய இன்று நாவிதன்வெளிப்பிரதேசத்தில் பிரதேச செயலகத்தின் முன்னால் பொதுமக்கள், இளைஞர்களின் ஏற்பாட்டில் சூழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டம் ஆரமப்pக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக்கோரி சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு தெரிவித்தே நாவிதன்வெளிப் பிரதேசத்திலும தாங்கள் பொராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இங்கு நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களும், ஆலய குருக்கள்மார்;, இளைஞர்கள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்