குறுந்திரைப்பட  போட்டிகளுக்கான  செயலமர்வு (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மட்ட மாணவர்களுக்கான குறுந்திரைப்பட போட்டிகளுக்கான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

தேர்தல் ஆணைக்குழு, கல்வி அமைச்சு மற்றும் களனி பல்கலைக்கழக மக்கள் தொடர்பாடல் கல்விப் பிரிவு இணைந்து ஜனநாயகம், மக்கள் இறைமை மற்றும் சர்வஜன வாக்குரிமை தொடர்பில் மக்களை அறிவுறுத்துவதற்காக ‘பௌர’ எனும் தலைப்பில் குறுந்திரைப்பட போட்டி விழாவொன்றை நடாத்தவுள்ளன.

இந்த குறுந்திரைப்பட போட்டியில் பாடசாலை மற்றும் திறந்த பிரிவுகளாக இரண்டு போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

தேர்தல் ஆணைக்குழு, கல்வி அமைச்சு மற்றும் களனி பல்கலைக்கழக மக்கள் தொடர்பாடல் கல்விப் பிரிவு இணைந்து அகில இலங்கை ரீதியாக மாவட்ட மட்டத்தில் அனைத்து பாடசாலைகளையும் உள்ளடங்கியதாக மார்ச் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 25 ஆம் திகதி வரை 22 செயலமர்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்மொழி மூலமான போட்டிகளுக்கு வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு இந்த செயலமர்வு நடாத்தப்பட்டு வருகின்றன.

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 பாடசாலைகளில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு போட்டிகளுக்காக மாணவர்களை தயார்படுத்தும் செயலமர்வு இன்று மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்த செயலமர்வில் பிரதம அதிதியாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொகமட், வளவாளராக  இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன சிரேஷ்ட தயாரிப்பாளர் ஜாபிர், மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள், பாடாசலை மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். (நி)

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!