அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவின் இலங்கைப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ இந்த மாத இறுதியில் இலங்கை வரவிருந்தார்.
இந்நிலையில் அவர் ஜப்பானில் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்வதால் இந்த விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.(சி)