அமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதனைக் காண சுமார் 20 ஆயிரம் பேர் ஃபுளோரிடாவின் ஓர்லாண்டோ நகரில் திரண்டனர்.
´மேலும் நான்கு ஆண்டுகள்´ என்றும் ´அமெரிக்கா´ என்றும் டிரம்பின் ஆதரவாளர்கள் உற்சாகமாய் ஆரவாரம் செய்தனர்.
ஊடகங்களில் வெளியிடப்படும் பொய்த் தகவல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்படி ஜனாதிபதி டிரம்ப் அப்போது கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டார்.
ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை சொந்த மாநிலமான ஃபுளோரிடாவில் வெற்றிபெறுவது டிரம்ப்புக்கு மிக முக்கியம்.
2016 ஆம் ஆண்டுத் தேர்தலில் அங்கு ஒன்றரை விழுக்காட்டுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் டிரம்ப் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது..(சே)