மட்டக்களப்பு குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் மரணம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்களில் மேலும் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு இருதயபுரத்தினை சேர்ந்த செ.அருண்பிரசாத்(30வயது)என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் 30ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: KrishnaKumar

error: Content is protected !!