வுவனியா நகரில் நாளை நீர் வெட்டு

வவுனியா நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாளைய தினம் 8 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பிரதான நீர் குழாய் இணைப்பு பணி காரணமாக இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய நாளை காலை 9 மணி தொடக்கம் மாலை 05 மணிவரை வவுனியா நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!