கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு சற்றுமுன்னர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியுள்ளது.
தற்போது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சாட்சியம் வழங்கிக் கொண்டிருக்கின்றார்.
இதேவேளை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியும் இன்றைய தினம்சாட்சியம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .(சே)