வவுனியாவில், கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!

வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றிலிருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி நேற்றையதினம் வீட்டில் தனிமையில் இருந்ததாகவும், வீட்டிற்கு வந்த அவரது உறவினர்கள் யுவதியைக் காணாத நிலையில் தேடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல இடங்களில் தேடியும் யுவதியைக் காணவில்லை என சந்தேகம் கொண்ட அவரது உறவினர்கள், இளைஞர்களின் உதவியுடன் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள கிணற்றினுள் தேடுதல் நடாத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த யுவதி நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் வவுனியா கொக்குவெளி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சிவானந்தம் சுலக்சனப்பிரியா என்ற யுவதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் குறித்த பெண் அண்மையில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதல் இடங்களைப்; பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!