உ லகில் வயதான காண்டாமிருகம் உயிரிழந்தது.

உ லகில் வயதான காண்டாமிருகம், தான்சானியா நாட்டில் வனவிலங்கு பிரதேசத்தில் வசித்து வந்த பாஸ்டா என்ற பெண் காண்டா மிருகம் தனது 57 ஆவது வயதில் உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த காண்டாமிருகம் 3 வயதாக இருந்தபோது, 1965 ஆம் ஆண்டு, நொகோரோங்கோரோ பள்ளம் என்ற இடத்தில் முதன்முதலாக அடையாளரம் காணப்பட்டது. 54 ஆண்டு காலம் அந்தப்பகுதியிலேயே அது வாழந்து வந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் நோய்னால் பாதிக்கப்பட்ட குறித்த காண்டாமிருகம் வனவிலங்கு முகாம்க்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 27ம் திகதி குறித்த காண்டாமிருகம் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காண்டாமிருகம் தன் வாழ்நாளில் ஒரு குட்டியைக் கூட ஈன்றது இல்லை அதுவே அதன் நீண்ட ஆயுளுக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

காண்டாமிருகங்கள் பொதுவாக 37 வயது முதல் 43 வயது வரை வாழ கூடியது அதேவேளை ஒரு இடத்தில் வைத்து நன்றாக பராமரித்து வந்தால் 50 ஆண்டு காலம்கூட வாழும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!