வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் தொழில் முயற்சிகள் உருவாக்கப்பட வேண்டும்-டக்ளஸ் தேவானந்தா

தொழில்சார் தகைமைகளைப் பெற்றுக் கொள்ளுகின்ற இளைஞர்,யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் தொழில் முயற்சிகள் உருவாக்கப்பட வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதற்காக இந்திய முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அண்மைக்காலமாக தொழில்சார் தகமைகளைப் பெற்றுக் கொள்வதில் இளைஞர் யுவதிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்ததுடன் இவ்வாறானவர்கள், தங்களுடைய தகமைகளுக்கு ஏற்றவகையில் தொழில் வாய்ப்பினை பெற்று கௌரவமாக வாழுகின்ற சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் துணை மருத்துவ சேவைகள், சூரிய மின்கலம், மற்றும் ஹபிறிட் வாகன தொழில்நுட்பம் ஆகிய பயிற்சி நெறிகளை கிளிநொச்சியில் ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு தர வேண்டும் என தெரிவித்தார்.

குறித்த விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் உடனடியாக தீர்வை பெற்றுத் தருவதாகவும் ஏனைய விடயங்களுக்கும் முடியுமான விரைவில் தீர்வை காணுவதற்கு முயற்சிப்பதாகவும் மேலும் அவர்  தெரிவித்தார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!