அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதல், 15 பேர் காயம்

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலொன்றில் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நியூயோர்க் நகரின் வடக்கே உள்ள ஒரு தேவாலயத்தில், இந்தக் கத்திக்குத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூயோர்க்கிலிருந்து 35 மைல் வடக்கே சுமார் 18 ஆயிரம் குடியிருப்பாளர்களைக் கொண்ட மொன்சியிலேயே இந்தக் கத்திக்குத்துத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!