முல்லைத்தீவில், முதியவர்களுக்கு, புத்தாடைகள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 45 முதியவர்களுக்கு, வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால், புத்தாடைகள் மற்றும் போர்வைகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, மாங்குளத்தில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தனிமையில் வாழ்ந்து வரும் 45 முதியவர்களுக்கு, 15 கட்டங்களாக தொடர்ச்சியான முறையில் 21 இலட்சம் பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய இம்முறை 50 ஆயிரம் ரூபா பெறுமதியில், 45 முதியவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் போர்வைகள் என்பன அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!