வன்னி மக்கள் அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் முன்பள்ளி மற்றும் தரம் ஒன்று மாணவர்கள் 150 பேருக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வவுனியா ஒலுமடு முன்பள்ளியில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதன்போது, முதுரம்பிட்டி, ஒலுமடு, கீரிசுட்டான், கற்குளம், துவரங்குளம், பட்டிக்குடியிருப்பு, மருதோடை, ஊஞ்சல்கட்டி, கோயிற்புளியங்குளம், பட்டறை திரிஞ்சகுளம் பகுதிகளைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வன்னி மக்கள் அமைப்பின் தலைவர் அருணாச்சலம் சக்திவேல் தலைமையில், இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!