குற்றம் இழைத்தவர்களை தண்டித்தால் அது அரசியல் பழிவாங்கலா? – அமரவீர!!

குற்றமற்ற நபர், தான் குற்றவாளி இல்லை என்பதை, நீதிமன்றங்களின் ஊடாக நிரூபிக்க முடியும் என, பயணிகள் போக்குவரத்து, மின் சக்தி, சக்தி வலு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

‘அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என எவரும் சட்டத்தின் முன்னாள் விசேடமானவர்கள் கிடையாது.

யார் தவறு இழைத்திருந்தாலும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டேதான் ஆக வேண்டும்.

இதனை அரசியல் பழிவாங்கல் என கூறமுடியாது.

இன்று நீதிமன்றங்கள் சுயாதீனமாக்கப்பட்டுள்ளன.

எனவே, எந்தவொரு நபரேனும் தான் நிரபராதி எனக்கருதினால், நீதிமன்றங்களின் ஊடாக அதனை நிரூபிக்க முடியும்.

பொலிஸும் சுயாதீனமாக செயற்படுகிறது.

சில திணைக்களங்கள் மந்தமாக செயற்பட்டால், நாம் அது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கத் தயாராகவே இருக்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!