மட்டு, மண்முனையில் மாற்றுத்திறனாளிகள் தின வருட இறுதி நிகழ்வு!!

மாற்றுத்திறனாளிகளின் தினத்தை சிறப்பிக்கும் வகையில் வருட இறுதி நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட எதிர்நீச்சல் மாற்றுத்திறனாளிகளின் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கல்வி மேம்பாட்டிற்கான கனடா அமைப்பின் அனுசரணையில் மண்முனை வடக்கு எதிர்நீச்சல் மாற்றுத்திறனாளிகளின் அமைப்பின் தலைவர் அந்தோனிப்பிள்ளை பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எதிர்நீச்சல் மாற்றுத்திறனாளிகளின் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதிதிகளாக மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்களான எஸ்.அருள்மொழி, கே.சந்திரகலா, மண்முனை வடக்கு பிரதேசசெயலக சமூகசேவை உத்தியோகத்தர் மோகன்ராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளின் சம்மேளன தலைவர் டி.ஹரிதாஸ், கல்வி மேம்பாட்டிற்கான கனடா அமைப்பின் பொருளாளர் மரியதாஸ் சியாணிராஜி மற்றும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசசெயலக பிரிவுக்குற்பட்ட எதிர்நீச்சல் மாற்றுத்திறனாளிகளின் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!