மட்டு, புனித மிக்கேல் கல்லூரி உயர்தர மாணவர்கள் மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு!!

வெளியாகியுள்ள 2019ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் 2019ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பாடசாலைகளில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் இருந்து பொறியியல் துறைக்கு 8 மாணவர்களும், மருத்துவத்துறைக்கும் 10 மாணவர்களும் தெரிவாகியுள்ளனர்.

இதில் புனித மிக்கேல் கல்லூரி மாணவன் மனோகிதராஜ் ஜூட் சுறேன்ராஜ் மருத்துவ துறையில் மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தில் தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்று கல்வி வலயத்திற்கும், கல்லூரிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்த புனித மிக்கேல் கல்லூரி மாணவர்களை வாழ்த்தி பாராட்டும் நிகழ்வு கல்லூரி அதிபர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!