அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலக வருடாந்த ஒன்றுகூடல்!!

அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்தின் வருடாந்த ஒன்று கூடலும் விளையாட்டு நிகழ்வுகளும் இசைநிகழ்வும் இன்று நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் கே.லவநாதன் தலைமையில் தம்பட்டை சுவாட் வெளிவாளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் விசேட விருந்தினராக தமன பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேசசெயலாளர் சாபிர் கலந்துகொண்டதுடன் ஆலையடிவேம்பு பிரதேசசெயலக கணக்காளர் க.கேசகன் நிருவாக உத்தியோகத்தர் கி.சோபிதா மற்றும் மேலதிக மாவட்ட பதிவாளர் மு.பிரதீப் பதவி நிலை உதவியாளர் ஆ.சசீந்திரன் உள்ளிட்ட பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்; என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வினை பிரதேச செயலாளர் ஆரம்பித்து வைத்ததுடன் உத்தியோகத்தர்களின் குழந்தைகளின் கலைநிகழ்வும் அரங்கேற்றப்பட்டன.

பின்னர் உத்தியோகத்தர்கள் மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டதுடன் அவர்கள் மூலமான வேடிக்கை வினோத விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றது.

இதேநேரம் உத்தியோகத்தர்களின் பாடல்களும் நிகழ்வுகளின் இடையே அரங்கேற்றப்பட்டது. இறுதியாக வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் நிறைவுற்றது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!